தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/முள்ளிப்பள்ளத்தில் மோசமான ரோடு

முள்ளிப்பள்ளத்தில் மோசமான ரோடு

முள்ளிப்பள்ளத்தில் மோசமான ரோடு


UPDATED : நவ 02, 2026 07:21 PM

ADDED : நவ 02, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 07:21 PM ADDED : நவ 02, 2026 07:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: முள்ளிப்பள்ளத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு காமராசர், தெற்கு தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் 'சிமென்ட்'ரோடு அமைக்கப்பட்டது. போக்குவரத்து அதிகமானது, முறையான பராமரிப்பில்லாதது போன்ற காரணங்களால் ரோடு இருந்த தடயமே இல்லாத அளவுக்கு மாறிவிட்டது. தற்போது கரடு, முரடாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடக்க சிரமப்படுகின்றனர்.

அப்பகுதியின் முருகேசன் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்கு முன் இங்கு ரோடு அமைக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் சிமென்ட் பெயர்ந்து மண் ரோடாகிவிட்டது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இரவில் போதுமான தெருவிளக்குகள் இல்லாததால் டூவீலரில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us