/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
/
பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
ADDED : டிச 26, 2024 05:05 AM
மதுரை: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி மதுரை மற்றும் தேனியில் நடந்தது.
டிஜிட்டல் சகாப்தத்தில் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து டீன் காஞ்சனா பேசினார். சிறுதானிய பிஸ்கட், மாப்பிள்ளை சம்பா பிஸ்கட், பிரவுனி, பிளம் கேக், வாழைப்பழ கேக், புட்டிங் கேக், முட்டையில்லா கேக், பன், பர்கர் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தேனி வேளாண் அறிவியல் நிலைய துணை இயக்குநர் சிவராமன், மாவட்ட தொழில்மைய ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன், இணை பேராசிரியை ஆரோக்கியமேரி, முதுநிலை ஆராய்ச்சியாளர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை ரம்யா சிவச்செல்வி ஏற்பாடுகளை செய்தனர்.

