ADDED : ஜன 19, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை விளாச்சேரி தீபா கணவர் கார்த்திகேயன் 31. சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று மதியம் வேலை தேடி டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றபோது கப்பலுார் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது தனியார் பஸ் மோதி இறந்தார்.
தொடரும் விபத்து
அதே இடத்தில் தொடர்ந்து விபத்து நடப்பதால் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அந்த ரோட்டை கடக்க இயலாதவாறு தடுப்பு அமைக்க வேண்டும். அங்கிருந்து 300 மீட்டர் துாரத்தில் உள்ள அண்டர் பாஸ் பாலத்தின் வழியாக சுற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

