/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பரிதவிக்கும் வாழை விவசாயிகள்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பரிதவிக்கும் வாழை விவசாயிகள்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பரிதவிக்கும் வாழை விவசாயிகள்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பரிதவிக்கும் வாழை விவசாயிகள்
ADDED : டிச 05, 2025 05:15 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் விவசாய நிலங்களில் ஆபத்தான மின்கம்பம், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி அழகுமலை: கொசவன்குழி பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் தென்னை,வாழை சாகுபடி பணிகள் நடக்கின்றன. இங்கு கான்கிரீட் மின் கம்பத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தும் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகள் வாழைமரங்களை உரசுமளவிற்கு தாழ்ந்து, தொட்டுவிடும் உயரத்தில் செல்கின்றன. இதனால் வாழைத்தார்கள், இலைகளை அறுக்கும்போது சிரமம் ஏற்படுகிறது என்றார்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணிகளுக்கான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும்' என்றனர்.