/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாழடைந்த கழிப்பறை பாழாகும் சுகாதாரம்
/
பாழடைந்த கழிப்பறை பாழாகும் சுகாதாரம்
ADDED : டிச 05, 2025 05:16 AM

சோழவந்தான்: திருவேடகத்தில் பாழடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். ஏடகநாதர் கோயில் அருகே அம்மச்சியார் அம்மன் கோயில் ரோட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
பராமரிப்பின்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும் கூரையில் காரைகள் பெயர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. நாய்கள், விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.
ஏடகநாதர் கோயிலுக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் சிரமம் அடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய கழிப்பறையை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும்.

