ADDED : டிச 05, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தஞ்சையில் நடந்த துணைமுதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக அணியினர் வெற்றி பெற்றனர்.
பத்து வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஜெயசூர்யா தங்கப்பதக்கம், ஹிர்த்திக், ஹரீஷ்ராஜ் வெள்ளி, கவுசிக் வெண்கலபதக்கம் வென்றனர். 14 வயது பிரிவில் பிரஜித் தங்கம் வென்றார். 19 வயது பிரிவில் மகேந்திரன், மீனேஷ் வெண்கலம் வென்றனர். பெண்கள் 10 வயது பிரிவில் கிருஷ்யா தங்கப்பதக்கம், 14 வயது பிரிவில் கிருஷ்மிகா தங்கப்பதக்கம், அஞ்சனா வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள், பயிற்சியாளர்கள் பிரேம்குமார், செல்வம் ஆகியோரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தலைவர் ராவணன், பொதுச் செயலாளர் செழியன், நிர்வாகிகள் அழகுராஜன், சுரேஷ், சுந்தர் பாராட்டினர்.

