/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் மக்காச்சோள பயிர்கள் செழிப்பு
/
மழையால் மக்காச்சோள பயிர்கள் செழிப்பு
ADDED : டிச 05, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர், அத்திபட்டி, சாப்டூர், சேடபட்டி, குடிசேரி, காளப்பன்பட்டி, வண்டப்புலி, வண்டாரி, சின்னக்கட்டளை, மோதகம், டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்துார், கூவலப்புரம், எஸ்.கீழப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தொடர் மழையால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. தற்போது கதிர் பிடிக்கும் நிலையில் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு மக்காச்சோளம் மழை காரணமாக நன்றாக வளர்ந்துள்ளதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

