/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய போட்டிக்கு மதுரை வீரர்கள் தேர்வு
/
தேசிய போட்டிக்கு மதுரை வீரர்கள் தேர்வு
ADDED : டிச 05, 2025 05:13 AM
மதுரை: விசாகபட்டினத்தில் இன்று முதல் நடைபெற உள்ள தேசிய ஸ்கேட்டிங் போட்டிக்கு மதுரையில் இருந்து 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன. அதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த மாநில போட்டியில் மதுரையின் பல ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 60பேர் பங்கேற்றனர். இதில் தலா 3 தங்கம் வென்ற பிரகதி, ஓவியா, 2 தங்கம் வென்ற மித்ரா, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற சவுஜன்யா, ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்ற ஜீவா, வெள்ளி பதக்கம் வென்ற ஆனந்தவர்ஷா ஆகியோர் தேசிய போட்டிக்கு தேர்வாகினர். தேசிய போட்டிகள் இன்று முதல் டிச.15 வரை விசாகபட்டினத்தில் நடக்கிறது.

