/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாசன கால்வாயை மாற்றி அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாத நீர்வளத்துறை
/
பாசன கால்வாயை மாற்றி அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாத நீர்வளத்துறை
பாசன கால்வாயை மாற்றி அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாத நீர்வளத்துறை
பாசன கால்வாயை மாற்றி அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாத நீர்வளத்துறை
ADDED : டிச 05, 2025 05:13 AM

மேலுார்: சூரக்குண்டு மாத்தி கண்மாய்க்கு செல்லும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளானதால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் நிலவுகிறது.
மேலுார் - கொட்டக்குடி 6வது கால்வாயில் இருந்து பல கி.மீ., துாரத்தில் உள்ள சூரக்குண்டு மாத்தி கண்மாய்க்கு கால்வாய் செல்கிறது. இதன் மூலம் தண்ணீர் நிரம்பி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறும். கால்வாய் அருகே கடை கட்டுவோர் கால்வாயை மறைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
சமூக அலுவலர் ஸ்டாலின் கூறியதாவது: உடைகல்லால் கட்டப்பட்ட பாசன கால்வாய் மீது கான்கிரீட் கலவை, சிலாப் கற்களால் மறைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகமும் கால்வாய் மீது பாலம் கட்டி வருகிறது.
கேட்டால் நீர்வளத்துறை அனுமதி வாங்கியதாக பொய் சொல்கின்றனர். கடை அருகே ஷெட் அமைக்க கால்வாயை உடைத்து தங்கள் வசதிக்கேற்ப கட்டி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும்.
கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார். நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில்,
''ஒன்றாவது வார்டுக்கு செல்ல கால்வாய் மீது ஏற்கனவே அமைத்திருந்த பாலம் பள்ளமானதால் புதிதாக கட்டி வருகிறோம் என்றார்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாசன கால்வாயை ஆக்கிரமிக்கக் கூடாது. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

