ADDED : செப் 19, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில், அதன் 10 உபகோயில்களில் உள்ள நிரந்தர உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, அறங்காவலர் சீனிவாசன் கலந்து கொண்டனர். ரொக்கமாக ரூ.75 லட்சத்து 92 ஆயிரத்து 604 காணிக்கையாக பெறப்பட்டது. தங்கம் 440 கிராம், வெள்ளி 439 கிராம், அயல் நாட்டு ரூ. 275 உண்டியல்களில் இருந்தன.