/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பறிபோகும் கண்மாய் கரைகள்; துார்ந்து போகும் நீர்வரத்து ஓடைகள் செயல்பாடு இல்லாத நீர்வளத்துறை
/
பறிபோகும் கண்மாய் கரைகள்; துார்ந்து போகும் நீர்வரத்து ஓடைகள் செயல்பாடு இல்லாத நீர்வளத்துறை
பறிபோகும் கண்மாய் கரைகள்; துார்ந்து போகும் நீர்வரத்து ஓடைகள் செயல்பாடு இல்லாத நீர்வளத்துறை
பறிபோகும் கண்மாய் கரைகள்; துார்ந்து போகும் நீர்வரத்து ஓடைகள் செயல்பாடு இல்லாத நீர்வளத்துறை
ADDED : டிச 17, 2025 06:45 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி குண்டாறு வடிநிலக்கோட்டத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் செயல்பாடு இல்லாமல் இருப்பதால் கண்மாய் கரைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஊருணிகளுக்கான வரத்து ஓடைகளை காணவில்லை.
உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு முன்பாக நீண்ட காலமாக மழைப்பொழிவு இல்லாமல் போனதால் கண்மாய்கள், ஊருணிகளுக்கான வரத்து ஓடைகள் சிதைந்து போனது. கால்வாய் திட்டம் வந்த பின் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
இந்த கண்மாய்களில் இருந்து அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து ஓடைகள் துார்ந்து போனதால் ஊருணிகளுக்கும், கண்மாய்களுக்கும் நீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதே போல நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்மாய்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நீர்வளத்துறையினர் செயல்பாடு இல்லாமல் உள்ளனர்.
தமிழ்ச்செல்வன்: உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் கண்மாய்கரையின் பெரும்பகுதியை சேதப்படுத்தி ஆக்கிரமித்து நகராட்சியினர் பஸ் ஸ்டாப் கட்டுகின்றனர்.
மாதரை கண்மாய் மேற்கு கரையில் 20 அடி நீளத்திற்கு கரையை சேதப்படுத்தி குடிநீர் குழாய் பதிக்கும்பணி நடக்கிறது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இப்பணிகள் நடக்கிறதா என்ற கேள்வி எழுப்பினால், அனுமதி கொடுக்கவில்லை என கூறுவதுடன், கரைகளை சேதப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதே போல் உசிலம்பட்டி கண்மாயில் இருந்து மறுகால் செல்லும் நீர் அன்னம்பாரிபட்டியில் உள்ள நீராலி ஊருணி, வண்ணான் ஊருணி வழியாக வெளியேறி ஆனையூர் கண்மாய்களுக்கு செல்லும். இந்த ஓடைகள் துார்ந்து போனதால் நீராலி ஊருணியில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளுக்குள் தேங்குகிறது.
இதே போல மதுரை ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி அருகில் உள்ள ஊருணி நிரம்பி மறுகால் செல்லும் நீர் மதுரை ரோட்டை கடந்து புத்துார், வடுகபட்டி கண்மாய் செல்லும்.
ரோடு அமைத்தவர்கள் அதற்கான வழியை ஏற்படுத்த, நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் ரோட்டிலேயே தேங்குகிறது. கவண்டன்பட்டியில் உள்ள ஊருணிகளும் நிரம்பி புத்துார், வடுகபட்டி கண்மாய்களுக்கு செல்லும்.
திம்மநத்தம் கண்மாயில் இருந்து சடச்சிபட்டி செல்லும் ஓடையும் துார்ந்து போனது. விவசாயிகள் கூட்டத்திலும் நேரிலும் புகார் கொடுத்தாலும் எந்த செயல்பாடும் இல்லாத துறையாக மாறியுள்ளது' என்றார்.

