ADDED : டிச 03, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறையில் தேசிய தேனீ வாரியம் சார்பில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது.
துறைத்தலைவர் சந்திரமணி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு இயக்குநர் சாந்தி தலைமை வகித்தார். கல்லுாரி டீன் மகேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் நளினி, சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் 200 பேர் கலந்து கொண்டனர்.