நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கு அரிசி தொகுப்பு, பரிசு பொருட்கள் வழங்கி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்து நலத்திட்டங்கள் வழங்கினார். சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், மேற்பார்வையாளர் ஹரிபிரசாத், பாண்டி, சுரேஷ் பங்கேற்றனர்.
மேலுாரில் கொடியேற்றம்
சி.ஐ.டி.யு., சார்பில் மேலுார் பஸ் ஸ்டாண்ட், டோல் கேட், அரிட்டாபட்டி ரப்பர் தொழிற்சாலை, கீழையூர் பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் மணவாளன், சேகர், அடக்கி வீரர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.