ADDED : டிச 13, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அவனியாபுரம் காமராஜர் நகர் பாரதி மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கரன், ஐதாரபாத் அஞ்சலக துறை இயக்குனர் ஆறுமுகம், ராமநாதபுரம் பாரதி தமிழ்ச் சங்க செயலாளர் சந்திரசேகர், டி.எம்.பி., வங்கி முன்னாள் மேலாளர் நல்ல அழகுராஜா பங்கேற்றனர்.
கவுன்சிலர் அய்யனார், முத்துலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எட்டையபுரம் இல்ல முன்னாள் பொறுப்பாளர் மோகன், சிவக்குமார், பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.

