UPDATED : நவ 14, 2026 07:32 PM
ADDED : நவ 14, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
13 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் யோகவர்மன் முதல்பரிசு, அதிபதி 2ம் பரிசு, ரித்திக் வல்லவன் 3ம் பரிசு பெற்றனர். 15 வயது பிரிவில் மஹிந்தன் முதலிடம், கதிர் 2ம் இடம், மோனிஷ் 3ம் இடம், 17 வயது பிரிவில் மோனிக் முதலிடம், சுகன் 2ம் இடம், லோஹித் 3ம் இடம் பெற்றனர்.
13 வயது மகளிர் பிரிவில் ஹர்ஷினி முதலிடம், ஸ்வேதா 2ம் இடம், கோபிகாஸ்ரீ 3ம் இடம் பெற்றனர். 15 வயது பிரிவில் யோகிதா முதலிடம், தனுஸ்ரீ 2ம் இடம், கதிஜா 3ம் இடம், 17 வயது பிரிவில் ராதிகா 3ம் இடம் பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
