ADDED : ஜன 21, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., புதிய தலைவராகதேர்வான சிவலிங்கத்தை அறிமுகம் செய்யும்கூட்டம் கப்பலுார் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
பெருங்கோட்ட தலைவர் கதலி நரசிங்க பெருமாள், துணைத் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் சின்னசாமி, பிரசார பிரிவு தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன், நகர தலைவர் சசிகுமார் கலந்து கொண்டனர்.
மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசுகையில், ''பல கட்சிகள்பெயருக்கு பதிவு செய்துவிட்டு, உட்கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதுஇல்லை. பா.ஜ., வில் உறுப்பினர் சேர்க்கை முதல், தேசிய தலைமை வரை முறையான தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்'' என்றார்.