ADDED : நவ 12, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை முல்லைநகரில்ஆய்வு செய்த பா.ஜ., மாநில பொதுச்செயலாளர்ராம.சீனிவாசன், ''அறுபதாண்டு பிரச்னையை அவசரமாக கையாள்கிறது அரசு'' எனக் கூறினார்.
அவர் கூறியதாவது:
செல்லுார் பகுதி முல்லைநகரில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா இல்லை. ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. குடிசை மாற்று வாரியத்தில்இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே பணம் பெற்று ரசீது வழங்கி, அனுமதித்துஉள்ளனர். பலர் வங்கிக் கடன் பெற்று வீடுகட்டியுள்ளனர். அரசின் பாதாள சாக்கடை திட்டம் உட்படஎல்லாமே உள்ளதால் இங்கிருப்போரை வெளியேறுங்கள் என்று சொல்வது நியாயமல்ல.
பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்த பின்பே காலி செய்யும்படி கூற வேண்டும். அந்த நடைமுறை இங்கு பின்பற்றவில்லை என்றார்.

