/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழை வேண்டி கருப்பு சாத்தும் நிகழ்வு
/
மழை வேண்டி கருப்பு சாத்தும் நிகழ்வு
ADDED : செப் 28, 2025 02:42 AM
மேலுார்: திருவாதவூர் சோழப்பேரேறி கண்மாயில் உள்ள புருஷா மிருகத்திற்கு புரட்டாசி மாதம் மழை வேண்டி கருப்பு சாத்து நிகழ்வு நடைபெறும்.
இந்நிகழ்வுக்காக திருவாதவூர் உள்ளிட்ட 5 கிராம மக்களிடம் செப்.22ல் நெல் வசூலிக்கப்பட்டது. இந் நெல்லை கிராமத்து சார்பில் விற்று அதிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு பூஜை பொருட்கள், கிடா வாங்கினர். நேற்று மந்தையிலிருந்து கிராம மக்கள் பூஜை பொருட்களை ஊர்வலமாக சோழப்பேரேறி கண்மாய்க்கு கொண்டு சென்றனர். அங்கு தேங்காயை நெருப்பில் சுட்டு மாவு போல் அரைத்து புருஷா மிருகத்திற்கு சாத்தினர். இன்று (செப். 28) கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட ஆடுகளை ஹிந்துக்கள், முஸ்லிம்கள் பகிர்ந்து அன்னதானம் மற்றும் கந்திரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ இவ்விழா கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.