ADDED : நவ 18, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்:
முள்ளிப்பள்ளத்தில் வ.உ.சி., நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் உறவின்முறை சார்பில் மதுரை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.
தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகிகள் மதுரைவீரன், முத்துராமலிங்கம், முருகன், சப்பாணி முன்னிலை வகித்தனர். சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், முன்னாள் சேர்மன் முருகேசன், சிவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் சுந்தர், மாணிக்கவேல், விஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
