UPDATED : அக் 31, 2026 07:21 PM
ADDED : அக் 31, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
மதுரை:
இளமனுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நுால்கள் வழங்கும் விழா நடந்தது.
மாணவி சக்திபிரியா வரவேற்றார். நுால்களை தமிழாசிரியர் மகேந்திரபாபுவிடம் திருஞானம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் வழங்கினார். நுாலகத்தின் பயன்கள், நுால்களை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. நுால் வனம் அமைப்பு சார்பில் திருக்குறள் பேரவை சந்தானம் வழங்கிய நுால்களும் வழங்கப்பட்டன. மாணவி ரெஜினா நன்றி கூறினார்.
