ADDED : ஜூன் 10, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் சார்பில் கிளைப்பொருளாளர் சுப்பிரமணியம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் பக்தவச்சலம் துவக்கி வைத்தார். மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார்.
கிளை முன்னாள் தலைவர் பிச்சுமணி, ஆலோசகர் வெங்கட்ராமன், மகளிரணி செயலாளர் ராஜம் மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா வெங்கட்ராமன், சித்ரா, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிளை பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தார்.
டி.வி.எஸ். நகர் பாரதியார் கிளை சார்பில் தயிர்சாதம், குடிநீர் வழங்கப்பட்டது. கிளைத்தலைவர் முரளி, துணைத் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், தலைமை ஆலோசகர் ரங்கராஜன் கலந்து கொண்டனர்.