தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொத்தனார் மர்ம சாவு: உறவினர்கள் மறியல்

கொத்தனார் மர்ம சாவு: உறவினர்கள் மறியல்

கொத்தனார் மர்ம சாவு: உறவினர்கள் மறியல்


ADDED : ஏப் 24, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டு நண்பரோடு வந்த கொத்தனார் வீட்டிற்கு செல்லாமல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல கூடாது என உறவினர்கள் இரண்டு மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் அருகே கல்லணை புதுாரைச் சேர்ந்தவர் கொத்தனார் மருதுபாண்டி 27. இவர் இரண்டு மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அவரோடு மதுரையைச் சேர்ந்த மற்றொரு நபரும் சென்றார். இருவரும் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஈரோட்டில் இருந்து திருமங்கலம் வழியாக கல்லணைக்கு வந்துள்ளனர். ஆனால் மருதுபாண்டி வீட்டிற்கு சென்ற அந்த நண்பர் மருதுபாண்டியன் பெற்றோரிடம் அலைபேசி, மற்றும் டூவீலரை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார்.

அப்போது மருதுபாண்டி குறித்து பெற்றோர் கேட்டபோது வந்து கொண்டிருப்பதாக கூறினார். நீண்ட நேரமாக அவர் வராததால் பெற்றோர்கள் தேடிச் சென்றனர். கல்லணை ரோட்டில் படுகாயங்களுடன் மருதுபாண்டி இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கூடக்கோவில் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தால் மட்டுமே உடலை கொண்டு செல்ல விடுவோம் எனக்கூறி பெற்றோர், உறவினர்கள் கூட கோவில் கல்லணை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதையடுத்து மருதுபாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போராட்டம் காரணமாக 2 மணி நேரம் கூடக்கோவில் திருமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us