/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் பாலப்பணிகள் தீவிரம்
/
கோரிப்பாளையத்தில் பாலப்பணிகள் தீவிரம்
ADDED : ஜன 31, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோரிப்பாளையத்தில் அமைய உள்ள மேம்பால பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்பணிகளுக்காக பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை இன்று(ஜன.,31) அகற்றுகிறது.
கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைய உள்ளது. தமுக்கம் மைதானத்தில் துவங்கி, மீனாட்சி கல்லுாரி எதிரே உள்ள ரோட்டோரமாக ஏ.வி., பாலத்திற்கு இணையாக சென்று, வைகை ஆற்றை கடந்து, தென்கரையில் உள்ள அண்ணாத்துரை சிலை அருகே முடிவடைகிறது. பாலம் ஸ்டேஷன் ரோட்டில் கிளை பாலம் அமைய உள்ளது. பாலத்தின் நீளம் 2 கி.மீ., துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.