/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலாளர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஸ் டிரைவர்கள்
/
மேலாளர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஸ் டிரைவர்கள்
மேலாளர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஸ் டிரைவர்கள்
மேலாளர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஸ் டிரைவர்கள்
ADDED : அக் 24, 2024 05:34 AM

மேலுார்: நாவினிபட்டியில் அரசு பஸ்களை நிறுத்த மேலாளர் உத்தரவிட்டும் டிரைவர்கள் நிறுத்த மறுப்பதால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேலுாரில் இருந்து காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சாவூர் உள்பட பல நகரங்கள், வெளி மாவட்டங்களுக்கு நாவினிப்பட்டியை கடந்து செல்ல வேண்டும். இவ் ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும் 500 க்கும் மேற்பட்டோர் தங்கள் உயர்கல்வி, அவசிய தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இவ்வூரில் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் மறுக்கின்றனர். இதுகுறித்து கேட்போரிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
சமூக ஆர்வலர் சம்சுதீன் கூறியதாவது- மதுரையில் இருந்து நாவினிப்பட்டி வழியாக பிற நகரங்கள், மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை நிறுத்தும்படி கும்பகோண கோட்ட மேலாளர் 2019 ல் உத்தரவிட்டுள்ளார். அந்த ஆணையை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். இருந்தபோதிலும் டிரைவர்கள் நிறுத்த மறுக்கின்றனர்.
நாவினிபட்டியை சேர்ந்தவர்களை நிறுத்தத்திற்கு அப்பால் 4 கி.மீ., தொலைவில் உள்ள மேலுாரில் இறக்கி விடுகின்றனர். அதனால் பயணிகள் தேவையின்றி 8 கி.மீ., பயணிக்க ஆட்டோவுக்கும் கூடுதாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நேரமும் விரயமாகிறது. இரவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நாவினிபட்டியில் பஸ்சை நிறுத்தாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கும்பகோண கோட்ட மேலாளர் நாகராஜன் கூறுகையில், நாவினிபட்டியில் பயணிகளை இறக்கிவிட மறுக்கும் டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

