நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: ஆலம்பட்டியை சேர்ந்தவர் போதுமணி 50. டீக்கடை உரிமையாளர். நேற்று முன்தினம் மாலை கடைக்கு பொருட்களை வாங்க டூவீலரில் திருமங்கலத்திற்கு சென்றார்.
விருதுநகர் ரோட்டில் ஆறுகண் பாலம் அருகே பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். டிரைவர் பேரையூர் காரைக்கேணி கருப்பசாமியிடம் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

