நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அ. வல்லாளபட்டியில் சிறுவன் ஒருவன் டூவீலர் மீது விழுந்ததையடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிறுவனின் உறவினர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் நேற்று மேலுார் - அழகர்கோவில் ரோட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதித்தது. எஸ்.பி., அரவிந்த், எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், தாசில்தார் செந்தாமரை, டி.எஸ்.பி., சிவக்குமார் ஆகியோர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.