/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலையேற்றம் விரும்புவோருக்கு அழைப்பு
/
மலையேற்றம் விரும்புவோருக்கு அழைப்பு
ADDED : டிச 17, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு வன அனுபவக் கழகம், தமிழக வனத்துறை இணைந்து மலையேற்றத்தை ஊக்குவிக்க 'ட்ரெக் தமிழ்நாடு' எனும் திட்டத்தை துவக்கியுள்ளனர். இதற்காக மாவட்டத்தின் குட்லாடம்பட்டி அருகே தடாகை மலையேற்றப் பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மலையேற்றம் செய்ய விரும்புவோர், 'ட்ரெக் தமிழ்நாடு' இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வனத்துறை அலுவலர்களின் உதவியோடு மலையேற்றம் நடைபெறும்.
விவரங்களுக்கு www.trektamilnadu.com இணையதளத்தை பார்வையிடலாம்.

