ADDED : அக் 31, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்:  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற  முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார்.  வளாகத்தில், மதுரையில் பிரம்ம குமாரிகள் அமைப்பு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஆண்டு விழா அழைப்பிதழை
பிரம்ம குமாரிகள் முதல்வரிடம் வழங்கினர். அழைப்பிதழை பெற்ற முதல்வர் விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது அப்பகுதியைத் தாண்டி வெளியில் கூடியிருந்தோரில், ஒருவர் திடீரென, 'எனது மகனை காணவில்லை தலைவரே' என சத்தமாக குரல் எழுப்பினார். அந்த  நபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

