ADDED : பிப் 21, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தி.மு.க., அரசின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோஜியோ சார்பில் பிப்.25ல் மறியல் போராட்டம் நடக்க உள்ளது.
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பிரசார பயணத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் துவக்கி வைத்தார். வட்டார நிர்வாகிகள் ஸ்ரீரங்கநாதன், தீனன், அருண்குமார், அம்சராஜன், யோகராஜ், ராஜாங்கம், வணங்காமுடி, ஆனந்த், கவுசல்யா, பால மனோகரன், கருப்பசாமி, குமார், வைரமணி பிரசாரம் செய்தனர்.

