/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு
/
மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : நவ 15, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்தவர் மந்திரிகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் தேர்வு வினாத்தாளை அச்சிடுவதாக கூறி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு விதிகளில் இடமில்லை.
தருவை உயர்நிலை பள்ளியில் மாணவர்களிடம் தலா ரூ.45 வசூலிக்கப்படுகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.17 க்கு ஒத்திவைத்தது.

