தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேலுார் பாசனத்திற்கு கூடுதல் நீர் கோரி வழக்கு

மேலுார் பாசனத்திற்கு கூடுதல் நீர் கோரி வழக்கு

மேலுார் பாசனத்திற்கு கூடுதல் நீர் கோரி வழக்கு


ADDED : ஜன 24, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை,: மேலுார் வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மேலுார் பகுதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 90 நாட்கள் தண்ணீர் திறக்க 2023 டிச.,9 ல் தமிழக அரசு உத்தரவிட்டது

கடந்தகால அரசாணைகள்படி 120 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். இதை பின்பற்றாவிடில் விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். மேலுார் பகுதி பயிர்களின் தற்போதைய நிலவரத்தை கணக்கில் கொண்டு, 120 நாட்கள் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர், கலெக்டர் அடுத்தவாரம் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us