/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவை மார்க்கெட்-மேலக்கால் இடையே வைகையில் பாலம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜன 08, 2025 05:15 AM
மதுரை : மதுரை பரவை மார்க்கெட்- மேலக்கால் ரோடு இடையே வைகை ஆற்றில் பாலம் அமைக்க தாக்கலான வழக்கில், மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை நடராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை-திண்டுக்கல் ரோடு பாத்திமா கல்லுாரி முதல் பரவை, சமயநல்லுார்வரை வாகன போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
பரவை காய்கறி மார்க்கெட்டிற்கு அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பரவை மார்க்கெட் முதல் வைகை ஆறு வழியாக மேலக்கால் ரோட்டை இணைக்கும் வகையில் 1.5.கி.மீ.,துாரம் மேம்பாலம் அமைக்க 2005 ல் நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பாலம் அமைந்தால் கோச்சடையிலுள்ள மாநகராட்சி கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தை மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் பயன்படுத்த முடியும்.
தற்போது பரவை மார்க்கெட்டிற்கு 7 கி.மீ., துாரம் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. பாலம் அமைக்க வேண்டும். கொண்டமாரி ஓடை பாலம் சேதமடைந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் மார்க்கெட்டிற்கு சென்று வருகின்றன. அப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.