ADDED : டிச 11, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: மேலுார் அருகே புலிமலைப்பட்டி கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
புலிமலைப்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் டிச.14 ல் நடைபெற உள்ளது. அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி மேலுார் டி.எஸ்.பி.,கீழவளவு இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.