/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஞ்சமி நிலத்தை மீட்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
பஞ்சமி நிலத்தை மீட்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
பஞ்சமி நிலத்தை மீட்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
பஞ்சமி நிலத்தை மீட்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 23, 2024 05:23 AM

மதுரை; திருவாதவூர் அருகே பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தாக்கலான வழக்கில் மனுவை கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: பிரிட்டீஷ் ஆட்சியின்போது திருவாதவூர் அருகே டி.மாணிக்கம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் சிலருக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அதை விற்கவோ அல்லது மறுவகைமாற்றமோ செய்ய முடியாது. அந்நிலத்தை வி.சி.க.,வை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர். பிளாட்களாக பிரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். விற்பனை, போலி பட்டா தயாரித்தது தொடர்பாக மேலுார் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும். சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை கலெக்டர், மேலுார் தாசில்தார் பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.