ADDED : மே 05, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் சி.பி.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 16 கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையை கண்டுபிடித்த சகாயத்திற்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பூமிநாதன், திலகர் பங்கேற்றனர்.