ADDED : ஆக 11, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்டம் வடக்கு உபகோட்டத்தில் ஞான ஒளிவுபுரம் பிரிவுக்கு உட்பட்ட 057 - 018 மற்றும் 057 - 019 ஆகிய இரண்டு மின்பகிர்மான பகுதிகளை உள்ளடக்கிய மின்இணைப்புகள் அனைத்தும், ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் இனிவரும் காலங்களில் இரட்டைப்படை மாதங்களில் கணக்கீடு செய்யப்படும் என்று செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.