/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி குன்றத்தில் இன்று தேரோட்டம்
/
சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி குன்றத்தில் இன்று தேரோட்டம்
சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி குன்றத்தில் இன்று தேரோட்டம்
சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி குன்றத்தில் இன்று தேரோட்டம்
ADDED : அக் 28, 2025 03:51 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (அக்.28) காலை தேரோட்டம் நடக்கிறது.
கோயிலில் அக்.22 முதல் நடந்த யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தியாகி, தங்கம், வெள்ளிக் குடங்களில் இருந்த புனித நீர் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபி ஷேகம் செய்யப்பட்டது.
உச்சிகால பூஜை முடிந்து உற்ஸவர் சுப்பிர மணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுதேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
உருவம் மாறிய சூரபத்மன் ரதவீதிகளில் சூரபத்மன் முன் செல்ல வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிர மணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல, அவர்களைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை 8 திக்கு களிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
யானைமுகம், சிங்க முகம், ஆட்டுத்தலை உள்பட பல்வேறு உருவங் களில் சூரபத்மன் மாறி மாறிச் செல்ல இறுதியில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பின்பு சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார கதையை பக்தர் களுக்கு திருவிழா நம்பியார் சங்கர் சிவாச்சாரியார் கூறினார். கோயிலில் உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலை மாற்றி, தீபாராதனை முடிந்து பூச்சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரி வீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
பக்தர்கள், மக்கள் அவதி சஷ்டி துவங்கிய நாள் முதல் பக்தர்கள் கோயில் முன் வாசல் வழியாக கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்த போலீசார், கோயில் அருகே திருக்குளம் சந்து வழியாக கோயிலுக்குள் செல்ல இரும்பு தடுப்புகள் அமைத்தனர். இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். அத்தெருவில் குடியிருப்போர் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
நேற்று காலை பெரிய ரத வீதி, மேலரத வீதி சந்திப்பு, கொத்தாளமுக்கு பகுதி முழுவதும் போலீசார் இரும்புத் தடுப்புகளை அமைத்து கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர் களுக்கும் தடை விதித்து, 16 கால் மண்டபம் வழியாக சுற்றிச் செல்லும்படி கூறினர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் ஒரு பகுதியில் வசிப்போரும், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி, திருநகர், திருமங்கலத்தில் இருந்து வந்த பக்தர்கள், குழந்தை களுடன் வந்தவர்கள், வயதானோர் பெரும் சிரம மடைந்தனர். இதனால் 16 கால் மண்டபம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது.
கொத்தாளமுக்கு பகுதி யில் பக்தர்கள் செல்ல தடை விதித்ததால், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம் உட்பட பக்தர்கள் போலீசாரிடம், 'எதற்காக இப் பகுதியில் தடை விதிக்கிறீர்கள், பக்தர்கள் அவதிக்கு உள்ளாவதால் உடனே இவ்வழியை திறந்து விடுங்கள்' என வாக்குவாதம் செய்தனர்.
போலீசார், 'கோயில் நிர்வாகம் அறிவுறுத்தலால் நாங்கள் தடை விதித்துள்ளோம். அவர்களை மீறி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்றனர். இது வாக்குவாதமாக மாறியது. அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி யிடம் பக்தர்கள் முறை யிட்டனர். அவர், தடுப்புகளை அகற்றி பக்தர்கள் நடந்து செல்ல அனு மதிக்குமாறு கூறியதால் அனுமதிக்கப்பட்டனர்.

