ADDED : ஜன 18, 2026 07:40 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை சாணக்யா செஸ் அகாடமி, சின்ன சூரக்குண்டு அஸ்வினி வித்யாசாலா பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்றார்.
தாளாளர்கள் சுப்பையா, சரஸ்வதி தலைமை வகித்தனர். முதல்வர் பிரபா, துணை முதல்வர் ஷோபனா, டிரஸ்டிகள் பிரபாகரன், கார்த்திகா, ராஜி அரசு முன்னிலை வகித்தனர்.
7 முதல் 15 வயது நிரம்பிய மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு, கோப்பை வழங்கப் பட்டது. சாணக்யா அகாடமி செயலாளர் சுதாகரன், இணைச்செயலாளர் பிரகதீஷ் கலந்து கொண்டனர்.
