/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் அதிகரிக்கும் புற்றுநோய்கள் கவுன்சில் எச்சரிக்கையை மறைக்கும் முதல்வர் அ.தி.மு.க., குற்றச்சாட்டு

ADDED : மார் 18, 2025 05:47 AM
மதுரை:''மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2.20 கோடி பேர் பயனடைந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.75,694 கோடிக்கு செய்த பணிகளுக்கு அரசு வெள்ளை அறிக்கை விடுமா.
தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கையை முதல்வர் ஸ்டாலின் மறைத்துள்ளார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் எந்த ஏற்றமும் இல்லை. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒருவருக்கு சோதனை செய்தால் அதை மூவருக்கு செய்ததாக கணக்கு காட்டப்படுகிறது. இத்திட்டம் முழுக்க முழுக்க தோல்வியை தழுவி உள்ளது. ஆனால் 2.20 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, டில்லி மாநிலங்களில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 2018ல் ஒரு லட்சம் பேரில் 16 பேருக்கு மார்பக புற்று நோய் வந்தது. தற்போது 58 பேராக உயர்ந்து விட்டது. முதல்வர் ஸ்டாலினோ கவுன்சில் விடுத்த எச்சரிக்கையை மறைத்து ஏதோ சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்த்து தான் புற்றுநோய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது என்று கூறுகிறார்.
கடந்த 4 ஆண்டுகால பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.75,699 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும். இவ்வாறு கூறினார்.