/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பாதி கிணறு தாண்டிய' நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம்
/
'பாதி கிணறு தாண்டிய' நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம்
'பாதி கிணறு தாண்டிய' நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம்
'பாதி கிணறு தாண்டிய' நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம்
ADDED : ஜன 25, 2025 05:33 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவு அலுவலகம் 2 தளங்களுடன் 'பாதி கிணறு தாண்டிய' நிலையில் மீதி 4 தளங்களுக்கு நிதியை எதிர்பார்த்து உள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டடம் தரைத்தளம், முதல் தளத்துடன் 20 ஆயிரம் சதுர அடியில் செயல்படுகிறது. இங்கு மருத்துவ, அறுவை சிகிச்சை, புற்றுநோய் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.
ஆனாலும் நெருக்கடியாக இருப்பதால் மருத்துவக் கல்லுாரி அருகே தரைத்தளம், ஆறு தளங்களுடன் ரூ.100 கோடியில் குழந்தைகள் நலப் பிரிவு கட்ட திட்டமிடப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ரூ.20 கோடியில் தரைத்தளத்துடன் கூடுதலாக இரண்டு தளங்கள் மட்டும் 12 ஆயிரம் சதுர அடியில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது 95 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் குறைவான இட வசதியால் குழந்தைகள் நலப்பிரிவை இங்கு மாற்ற முடியாத நிலை உள்ளது.
கட்டுமான பணி முடிவடைந்து மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பழைய கட்டடத்தில் பாதி பிரிவு, புதிய கட்டடத்தில் பாதி பிரிவு என செயல்பட முடியாது. இது டாக்டர்கள், நர்ஸ்கள், பிற பணியாளர்களின் தேவையை அதிகப்படுத்திவிடும். ஒரே கட்டடத்தில் செயல்பட்டால்தான் டாக்டர்கள், பணியாளர்கள் அதற்கேற்ற எண்ணிக்கையில் செயல்பட முடியும்.
இப்பிரச்னையை தவிர்க்க மீதியுள்ள 4 தளங்களையும் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்குவதுதான் வழி. தரைத்தளத்துடன் கூடிய ஆறு தளங்களுக்கு கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியாக செலவு தேவையில்லை.
மேல்தள பணிகளுக்கு மட்டுமே கூடுதலாக செலவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் காட்சிப் பொருளாக மாறிவிடும்.

