ADDED : நவ 15, 2024 06:10 AM

மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. ஓவியம், உடை அலங்காரம், மாறுவேடம், ரங்கோலி போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரை எல்.கே.பி.,நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் சிவபார்வதி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். இசை, சிலம்பம், கவிதை உட்பட போட்டிகளில் வென்றோருக்கு சவுத் இந்தியன் வங்கி மேலாளர் அருண் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியை அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.
மதுரை பீபீகுளம் தனபால் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தார். ஆசிரியை லீனா ஆனந்தி வரவேற்றார். ஆசிரியைகள், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியைகள் பிரியங்கா, உஷா ராணி பங்கேற்றனர்.
திருமங்கலம்
மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் ஆலோசகர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் மெர்சி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
அலங்காநல்லுார்
நகரி பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் சார்பில் கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சாம் பிரசாத் ராஜா, பத்மாவதி, மாவட்ட திட்ட அலுவலர் ரஞ்சிதா பரிசு வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, தேவி பிரியா, வாஞ்சிநாதன், ஜாஹீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழக கால்பந்து அணிக்கு தேர்வான கொண்டையம்பட்டி அரசு பள்ளி மாணவி அஜுமாவிற்கு பவுண்டேஷன் சார்பில் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.