UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:55 AM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் பழுதடைந்ததால் 2024 ல், இடிக்கப்பட்டது. கடந்தாண்டு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்தனர். இதுபற்றி தினமலர் நாளிதழில் கடந்தாண்டு ஆகஸ்டில் செய்தி வெளியானது.
இதையடுத்து 8 வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு அக்டோபரில் பணிகள் துவங்கி, பணிகள் முடிந்து நேற்று எம்.எல்.ஏ., விஜய் தலைமையில் திறப்பு விழா நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இத்துடன் டி.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறை, சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்களை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
