/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி அங்கன்வாடி பணியாளர் 'சஸ்பெண்ட்'
/
கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி அங்கன்வாடி பணியாளர் 'சஸ்பெண்ட்'
கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி அங்கன்வாடி பணியாளர் 'சஸ்பெண்ட்'
கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி அங்கன்வாடி பணியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 07, 2025 06:51 AM

மதுரை : மதுரையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வினியோகித்த கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் கிளம்பியதைத் தொடர்ந்து பணியாளர் கோமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு வழங்க கொழுக்கட்டை தயாரானது. அவற்றை பணியாளர் கோமதி விநியோகித்துள்ளார். ஒரு குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இறந்து இருந்துள்ளது. இதை கவனிக்காமல் வினியோகித்துள்ளனர்.
இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கோமதியிடம் கேட்டுள்ளனர். ஆனால் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி விசாரணை நடத்தி, கோமதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில் 'இது பணியாளருக்கு தெரிந்தே நடக்க வாய்ப்பில்லை. பணியாளர் மாவு பிசைந்தபோது கவனக்குறைவாக இருந்திருக்கலாம். அதனால் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம்' என்றனர்.