/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கொட்டிய மழை கலெக்டர் ஆய்வு
/
மதுரையில் கொட்டிய மழை கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 25, 2025 05:10 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கர்டர் பாலம், கீழவாசல் தயிர் மார்க்கெட் பகுதிகளில் கலெக்டர் பிரவீன்குமார் நேற்று ஆய்வு செய்து தேங்கிய மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீ.,யில்): மதுரை வடக்கு 66.6, தல்லாகுளம் 46.8, விரகனுார் 33.2, சிட்டம்பட்டி 32.2, கள்ளந்திரி 46.8, இடையபட்டி 40, தனியாமங்கலம் 57, மேலுார் 30.2, புலிப்பட்டி 36.6, வாடிப்பட்டி 35, உசிலம்பட்டி 27, விமானநிலையம் 53.2, திருமங்கலம் 40.2, பேரையூர் 47.4, கள்ளிக்குடி 38.6, எழுமலை 42.6.
அணைகளில் நீர் இருப்பு பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.65 அடி (மொத்த உயரம் 152 அடி). 6786 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரத்து வினாடிக்கு 5135 கனஅடி. வெளியேற்றம் வினாடிக்கு 400 கனஅடி. வைகை அணை 61.02 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 3802 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 634 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 829 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
சாத்தையாறு அணை 5 அடி (மொத்த உயரம் 29 அடி). அணையில் 2.85 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

