/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் பத்திரங்கள் தட்டுப்பாடு கலெக்டர் நடவடிக்கை தேவை
/
பேரையூரில் பத்திரங்கள் தட்டுப்பாடு கலெக்டர் நடவடிக்கை தேவை
பேரையூரில் பத்திரங்கள் தட்டுப்பாடு கலெக்டர் நடவடிக்கை தேவை
பேரையூரில் பத்திரங்கள் தட்டுப்பாடு கலெக்டர் நடவடிக்கை தேவை
ADDED : ஆக 08, 2025 02:47 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் நுாறு ரூபாய் பத்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அரசு வெளியிடும் முத்திரைத்தாள் எனப்படும் பத்திரங்கள் கருவூலம் மூலம் உரிமம் பெற்றவர்களுக்கு வழங்கி விற்பனை செய்யப்படுகிறது. நுாறு ரூபாய் மதிப்பில் துவங்கி ஒரு லட்சம் வரையான மதிப்பில் உள்ளது.
நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் விற்பது, வாங்குவது போன்ற பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தாளில் எழுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வர்.
இது சட்ட ரீதியான சொத்து பரிமாற்ற நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு 20, 50 ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது குறைந்தபட்ச பத்திர மதிப்பே 100 ரூபாய் தான்.
இந்தப் பத்திரத்தையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு திட்டங்களுக்கு சான்றிதழ் வழங்குவது, வாடகை, ஒத்தி ஒப்பந்த பத்திரங்கள் போன்றவற்றுக்கு பெரும்பாலும் 100 ரூபாய் பத்திரங்களைத்தான் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இந்த 100 ரூபாய் பத்திரங்கள் பேரையூர் பகுதியில் கிடைக்கவில்லை. பேரையூர் கருவூலம் செய்யும் தவறுக்கு பொதுமக்கள் அவதிப்படும் அவல நிலை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் குறைந்த மதிப்பு பத்திரங்கள் பொது மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

