ADDED : செப் 12, 2025 04:55 AM
திருப்பரங்குன்றம்:விளாச்சேரி ஆதி சிவன் நகரில் சுய உதவி குழுவினர் மானியத்துடன் வங்கி கடன் பெற்று மசாலா பொருட்கள் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் பிரவீன் குமார் பார்வையிட்டு, சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கினார்.
மொட்டை மலையில் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் கைவினை பொருட்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
சூரக்குளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இயந்திரமயமாக்களுக்கான துணைத் திட்டத்தின் கீழ் வாழநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட பவர் டிரில்லரின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வளையப்பட்டி ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயி நவநீதன் நிலத்தில் சொட்டுநீர் பாசன முறையில் சம்பங்கி, மல்லிகை, அவரைக்காய் பயிரிட்டுள்ளதை ஆய்வு செய்தார்.