நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் 2ம் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் துரைராஜ் தலைமை வகித்து, 2024-- 25ம் கல்வியாண்டில் மாணவர்கள், ஊழியர்களின் கல்வி, ஆராய்ச்சி சாதனைகள் குறித்து பேசினார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்.
விளையாட்டு விழாவில் பளுதுாக்கும் வீரர் சம்சுதீன் கபீர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கினார்.