ADDED : ஜூலை 13, 2026 12:37 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்-: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. பொறுப்பு முதல்வர் கிருஷ்ணாஸ்ரீ முன்னிலை வகித்தார்.
சென்னை சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் சி.எல்.ஆர்.ஐ., நிறுவன உயிர்வேதியியல், உயிர்தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி காமினி, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: கல்விக்கு எல்லை எதுவுமில்லை. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம். கல்வி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தலைமைத்துவ திறனை வளர்க்கிறது. ஒவ்வொரு மாணவியும் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும். கனவுகளை செயலாக மாற்றி சாதனை புரிய வேண்டும் என்றார். தலைவர் பன்சிதர், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ் பங்கேற்றனர்.
