/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழுதான பஸ் ஸ்டாப் பரிதாபத்தில் பயணிகள்
/
பழுதான பஸ் ஸ்டாப் பரிதாபத்தில் பயணிகள்
ADDED : ஜன 05, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் - சிவகங்கை ரோடு பெருமாள்பட்டியில் 1986-87 ல் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் சிதிலமடைந்துள்ளதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரகாஷ்: பஸ் ஸ்டாப் முழுவதும் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.
மேல்தளம் தாழ்வாக உடையும் நிலையில் உள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. உயிர் பலி ஏற்படும் முன் புதிய பஸ் ஸ்டாப் கட்டித்தர வேண்டும் என்றார்.
வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசந்தர் கூறுகையில், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.