sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.55 கோடியே 85 லட்சம் லோக் அதாலத்தில் இழப்பீடு

/

ரூ.55 கோடியே 85 லட்சம் லோக் அதாலத்தில் இழப்பீடு

ரூ.55 கோடியே 85 லட்சம் லோக் அதாலத்தில் இழப்பீடு

ரூ.55 கோடியே 85 லட்சம் லோக் அதாலத்தில் இழப்பீடு


ADDED : ஜூன் 15, 2025 05:46 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்ற லோக்அதாலத்தில் 5481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.55 கோடியே 85 லட்சத்து98 ஆயிரத்து 569 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லோக் அதாலத் நடந்தது. 365 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகையா, இளங்கோ, சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன், சுரேஷ் குமார் ஐசக்பால், டாக்டர் கார்த்திகேயன் விசாரித்தனர்.

21 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.5 கோடியே 48 லட்சத்து 54 ஆயிரத்து 972 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பதிவாளர் அப்துல் காதர் செய்திருந்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 'லோக்அதாலத்' நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தார். மாவட்ட அளவில் 25 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூர் நீதிமன்றங்களில் 5522 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.

நீதிபதிகள் நாகராஜன், நாகலட்சுமி, உதயவேலவன், சார்பு நீதிபதிகள் சரவணபவன், பர்சனல் பேகம், ராம்கணேஷ், சரவண செந்தில் குமார், நீதித்துறை நடுவர்கள், சிவில் நீதிபதிகள் பங்கேற்றனர். 5460 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.50 கோடியே 37 லட்சத்து 42 ஆயிரத்து 587 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

254 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 53 சிவில் வழக்குகள், 71 காசோலை மோசடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 12 குடும்ப நல வழக்குகளில் தம்பதியினரிடையே சமரசம் ஏற்பட்டது. சேர்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us